நிறைவடைந்த கமலின் ‘விக்ரம்’ படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பல எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும், கமல் விஜய் சேதுபதி இருவரும் இணைந்துள்ள விக்ரம் திரைப்படம் முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவடைந்த கமலின் ‘விக்ரம்’ படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
Published on

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் விக்ரம். நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமானது. அதன்பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில், லோகேஷ் ஆக்ஷன் சொல்ல பகத் பாசில் துப்பாக்கியால் சுடுகிறார் பின்னர் படக்குழுவினர் அனைவரும் இணைந்து இட்ஸ் ஏ ராப் எனக் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com