

புதுச்சேரி
புதுவை நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
10 வழக்குகள்
புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் தேங்கிவரும் புகார்கள் மீது குறிப்பிட்ட காலகட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது.
இதற்காக புதுவை நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோரை கொண்ட அமர்வு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வில் மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் இருந்த 10 வழக்குகள் சமரச தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
ரூ.1 லட்சம் இழப்பீடு
அதில் 4 வழக்குகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் புகார்தாரர்களுக்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 நிவாரணமாக வழங்க தீர்வு காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதுவை வக்கீல்கள் சங்க செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல்கள் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆணைய பதிவாளர் குணசேகர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.