ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல்

உசிலம்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்திய வேன் பறிமுதல்
Published on

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூரில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி கடத்தப்படுவதாக வாலாந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மதுரை வளையங்குளத்தை சேர்ந்த முத்துலிங்கம் மகன் சக்தி(வயது 21) என்பவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சக்திவேலை கைது செய்து அவர் வாங்கி வைத்திருந்த 1,300 கிலோ ரேஷன் அரிசியையும் கடத்தலுக்காக பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com