மதுபாட்டில்கள் பறிமுதல்; முதியவர் கைது

விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் முதியவர் கைது செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்; முதியவர் கைது
Published on

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 74) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com