இருதரப்பினர் இடையே மோதல்; கார் உடைப்பு-10 பேர் படுகாயம்

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இருதரப்பினர் இடையே மோதல்; கார் உடைப்பு-10 பேர் படுகாயம்
Published on

அறந்தாங்கி:

குளிக்க சென்றனர்

அறந்தாங்கி அருகே திருநாளூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமநாதன்(வயது 62). இவர் சென்னையில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவில் திருவிழாவிற்காக சென்னையில் இருந்து திருநாளூருக்கு அவர் வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதன், அவரது உறவினரான கார்த்திக் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்க காரில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருநாளூர் தெற்கு பகுதியை சேர்ந்த நவீன்(20), காரை ஓரமாக நிறுத்த மாட்டாயா? என்று கேட்டதாக தெரிகிறது.

மோதல்

இது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தையடுத்து, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நவீன் தரப்பினர் காரை அடித்து உடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com