காரைக்காலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காரைக்காலில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்காலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

காரைக்கால்,

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காரைக்காலில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமூக வலைதளத்தில் வைரல்

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடைபெறும் மோதலால், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, அண்மையில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டுகொள்ளாத, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, காரைக்காலில் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன கோஷம்

காரைக்கால் பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் பஷீர், முரளி, நிர்மலா, ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com