கட்டிட தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார்.
கட்டிட தொழிலாளி பலி
Published on

புதுச்சேரி

முத்தியால்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிறிஸ்டியான் (வயது 55). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் லாஸ்பேட்டை சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். கருவடிக்குப்பம் சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கிறிஸ்டியான் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com