கட்டிட தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள்- சரக்கு வாகனம் மோதியதில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக ஊயிரிழந்தார்.
கட்டிட தொழிலாளி பலி
Published on

மூலக்குளம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 38). கட்டிட தொழிலாளி. புதுவையில் தங்கியிருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர், தனது நண்பர் கடலூர் கிளிஞ்சகுப்பத்தை சேர்ந்த ராஜா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அருளப்பன், ராஜா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருளப்பன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com