இடுபொருள் தயாரிக்கும் பயிற்சி முகாம்

கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் இயற்கை முறையில் இடுபொருள் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.
இடுபொருள் தயாரிக்கும் பயிற்சி முகாம்
Published on

நெட்டப்பாக்கம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் இயற்கை முறையில் இடுபொருள் தயாரிக்கும் பயிற்சி முகாம் கரியமாணிக்கம் உழவர் உதவியகத்தில் நடந்தது. முகாமுக்கு காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உழவர் உதவியக வேளாண் அலுவலர் திருநாடன் வரவேற்றார். அறிவியல் நிலைய நுண்ணுயிரியல் துறை வல்லுனர் மணிமேகலை இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் தயாரிப்பது குறித்து விளக்கினார்.

முகாமில், இயற்கை முறையில் அமிர்த கரைசல், மீன் அமிலம், முட்டை அமிலம், பஞ்சகவ்யம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமில் கரியமாணிக்கம், மடுகரை, ஏரிப்பாக்கம், நெட்டப்பாக்கம் மற்றும் பண்டசோழநல்லுர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம், களப்பணியாளர்கள் ரங்கநாதன், வெங்கடசாலம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com