மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாதா தாவூத் இப்ராகிமின் 3 சொத்துகள் ஏலம்
Published on

மும்பை,

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது சொத்துகளை மராட்டிய அரசு ஏலத்தில் விட்டு வருகிறது. கடந்த மாதம் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான 6 சொத்துகள் ஏலம் போகின. அப்போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவரது 3 சொத்துகளை ஏலத்தில் விட முடியவில்லை.

இந்தநிலையில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான ரத்னகிரி மாவட்டம் கேத் தாலுகா லோதே கிராமத்தில் உள்ள 2 நிலம், ஒரு கட்டிடம் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இதில் ஒரு நிலம் சுமார் 30 ஆயிரம் சதுர அடி, மற்றொரு நிலம் சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டது என்றும், அவை நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ள நிலங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 3 சொத்துகளையும் கேத் பகுதியை சேர்ந்த ரவீந்திர கதே என்பவர் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தார்.

அதே வேளையில் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான மறைந்த தாதா இக்பால் மிர்சியின் சொத்துகளை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதால், அதன் சந்தை விலை மீண்டும் நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com