மேலும் 53 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மேலும் 53 பேருக்கு கொரோனா
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,045 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 53 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 46 பேர் புதுச்சேரியையும், 6 பேர் காரைக்காலையும், ஒருவர் ஏனாமையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 42 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 13 பேர், வீடுகளில் 286 பேர் என 299 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 5.07 சதவீதமாகவும், குணமடைவது 98.69 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 389 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 ஆயிரத்து 107 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 6 ஆயிரத்து 392 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 20 லட்சத்து 38 ஆயிரத்து 180 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com