நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா முதியவர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கொரோனா முதியவர் பலி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

158 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 66 ஆயிரத்து 928 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 66,924 ஆக குறைந்தது.

இதற்கிடையே நேற்று மேலும் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 82 ஆக அதிகரித்துள்ளது.

முதியவர் சாவு

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 716 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 63 ஆயிரத்து 676 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2,876 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 529 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.எனவே இதுவரை இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 530 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com