நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 189 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 189 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

189 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 66 ஆயிரத்து 762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 23 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 66,739 ஆக குறைந்தது.

இதற்கிடையே நேற்று மேலும் 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 928 ஆக அதிகரித்துள்ளது.

மூதாட்டி சாவு

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 748 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 62 ஆயிரத்து 960 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 3,439 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 528 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்புதூர் பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே இதுவரை இம்மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com