மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட 35 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று
Published on

சேலம்:-

சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஒற்றை இலக்கு எண்ணில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 350 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 35 பேர் மட்டுமே கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com