நாமக்கல் மாவட்டத்தில் 67,342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்

நாமக்கல் மாவட்டத்தில் 67,342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்
நாமக்கல் மாவட்டத்தில் 67,342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் சேர்க்கப்பட்டது. எனவே இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67,972 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 975 ஆக அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று இந்த மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 67 ஆயிரத்து 342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 99 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com