நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 895 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 911 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று இந்த மாவட்டத்தில் 61 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 67 ஆயிரத்து 106 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 533 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 272 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com