நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.

இதனால் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67,830 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 98 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 66 ஆயிரத்து 887 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 533 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 435 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com