கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது.
கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது
Published on

சேலம்:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது.

கொரோனா

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது. இதன்படி நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. அதன்படி மாநகராட்சியில் 20 பேர் பாதிக்கப்பட்டனர்.

கொங்கணாபுரம், எடப்பாடி, பனமரத்துப்பட்டி, மேட்டூரில் தலா ஒருவர், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா 2 பேர், காடையாம்பட்டியில் 3 பேர், ஓமலூரில் 4 பேர், தலைவாசலில் 5 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

1,755 பேர் பலி

சென்னை, நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 44 பேர் உள்பட 86 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதன்படி இது வரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 319 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1,755 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com