புதிதாக 24 பேருக்கு கொரோனா

மதுரையில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதிதாக 24 பேருக்கு கொரோனா
Published on

மதுரை,

மதுரையில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

24 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது.

அதன்படி மதுரையில் நேற்று 24 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் நேற்று 552 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். நேற்று மாலை நிலவரப்படி மதுரையில் கொரோனாவுடன் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 552 ஆக உள்ளது.

60 பேருக்கு சிகிச்சை

இதில் 12 பேர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதுதவிர 120 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கண்காணிப்பு மையங்களில் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com