2 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தெற்று பாதிக்கப்பட்டுள்ளது.
2 பேருக்கு கொரோனா
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 330 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரி, மாகியில் தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருவர் குணமடைந்தனர். தற்போது 36 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 731 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 3,074 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 760 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 23 ஆயிரத்து 186 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com