சேலம் மாவட்டத்தில் புதிதாக 411 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் புதிதாக 411 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் புதிதாக 411 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 401 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதிதாக 411 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 234 பேர், சேலம் ஒன்றியத்தில் 20 பேர், ஓமலூரில் 16 பேர், மேச்சேரியில் 14 பேர், பனமரத்துப்பட்டியில் 13 பேர், நங்கவள்ளியில் 12 பேர், தலைவாசல் மற்றும் வீரபாண்டியில் தலா 9 பேர், காடையாம்பட்டி, ஆத்தூர் ஒன்றியம், அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர் நகராட்சி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், எடப்பாடி, கொளத்தூரில் தலா 7 பேர், சங்ககிரி, தாரமங்கலம், வாழப்பாடி பகுதிகளில் தலா 6 பேர், கெங்கவல்லி, மேட்டூர் நகராட்சியில் தலா 4 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 3 பேர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, நரசிங்கபுரம் நகராட்சியில் தலா 2 பேர், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

160 பேர் டிஸ்சார்ஜ்

மேலும், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்தரிகளில் சிகிச்சை பெற்று வந்த 160 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 532 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒருவர் பலி

சேலத்தை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 17-ந் தேதி சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 485 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com