திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 315 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 18 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 283 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com