4 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4 பேருக்கு கொரோனா
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தலா 4 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 37 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 43 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 395 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 678 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com