60 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் புதிதாக 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, 22 லட்சம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
60 பேருக்கு கொரோனா
Published on

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,311 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று 82 பேர் குணமடைந்தனர். தற்போது 7 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 430 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுவையில் தொற்று பரவல் 4.58 சதவீதமாகவும், குணமடைவது 98.62 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 145 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,170 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 3 ஆயிரத்து 243 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 22 லட்சத்து 545 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com