காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோனா

நடிகர் நடிகைகள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி மருத்துவ சிகிச்சை மூலம் குணம் அடைந்துள்ளனர்.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோனா
Published on

தற்போது இன்னொரு நடிகைக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவரது பெயர் நிக்கி தம்போலி. இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த பேய் படமான காஞ்சனா 3' படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு நாயகியாக நடித்து இருந்தார். பல இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். நிக்கி தம்போலிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளார். அதில் அவர், எனக்கு கொரோனா தொற்று

இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மருந்துகள் சாப்பிடுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் பாதுகாப்புடன் இருங்கள். எப்போதும் முககவசம் அணியுங்கள். கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி கழுவுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். எல்லோருடைய ஆதரவுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com