தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு 307 பேருக்கு தொற்று உறுதி

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு 307 பேருக்கு தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் சாவு 307 பேருக்கு தொற்று உறுதி
Published on

தர்மபுரி, ஜூன்.4-

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் நேற்று உயிரிழந்தனர். மாவட்டத்தில் 307 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கொரோனாவுக்கு 5 பேர் சாவு

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம்கள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் புதிதாக 307 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

385 பேர் வீடு திரும்பினர்

கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,999 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 385 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,916 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 136 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

========

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com