நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,658 ஆக அதிகரிப்ப

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,658 ஆக அதிகரிப்ப
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,658 ஆக அதிகரிப்ப
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 45,658 ஆக அதிகரித்து உள்ளது.

97 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45,561 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,658 ஆக அதிகரித்து உள்ளது.

953 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே நேற்று 187 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 44 ஆயிரத்து 277 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 953 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 428 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 100-க்கு கீழ் வந்து இருப்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com