நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 114 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 3 பேர் பலியாகினர்.

114 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45,068 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து 5 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,073 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,187 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 249 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்.

3 பேர் பலி

இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 420 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மல்லசமுத்திரம், மின்னக்கல், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 423 ஆக உயர்ந்தது. மேலும் இதுவரை 43,423 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 1,341 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

=======

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com