நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,810 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,810 ஆக அதிகரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,810 ஆக அதிகரிப்பு
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 44,810 ஆக அதிகரித்து உள்ளது.

144 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 9 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 44,666 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 144 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,810 ஆக அதிகரித்து உள்ளது.

1,656 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே நேற்று 184 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 42 ஆயிரத்து 736 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 418 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 1,656 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com