நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 327 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,414 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 327 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,414 ஆக அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 327 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,414 ஆக அதிகரிப்பு
Published on

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,087 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,414 ஆக அதிகரித்து உள்ளது.

2,372 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே நேற்று 397 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 663 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 379 பேர் இறந்து விட்ட நிலையில் 2,372 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் கடந்த வாரங்களை ஒப்பிடும்போது சற்று குறைந்து இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

======

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com