22 பேருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
22 பேருக்கு கொரோனா தொற்று
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,205 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 10,760 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 203 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய அறிவிப்பின்படி உயிரிழப்புகள் ஏதுமில்லை. அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 9 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 5 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 5 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 3 பேர் என மொத்தம் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 212 பேரில் 117 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com