322 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 322 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
322 பேருக்கு கொரோனா தொற்று
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 48,018 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 359 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 46,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 1,240 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் ஒரே நாளில் புதிதாக 322 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,340 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று 156 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 46,575 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 1,406 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com