சென்னை போலீஸ்காரருக்கு கொரோனா: விழுப்புரத்தில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை போலீஸ்காரருக்கு கொரோனா: விழுப்புரத்தில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சென்னை போலீஸ்காரருக்கு கொரோனா: விழுப்புரத்தில், குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தை சேர்ந்த ஒருவர், சென்னையில் சிறப்பு காவல் அதிரடிப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான விழுப்புரம் நன்னாட்டிற்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த கிராமத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த போலீஸ்காரரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com