துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா

துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு கொரோனா
Published on

மும்பை, 

சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சி தலைமைக்கு எதிராக அசாமில் முகாமிட்டு உள்ளதால் மராட்டிய அரசியலில் பரபரப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

நேற்று எனக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் நன்றாக உள்ளேன். டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்கள் ஆசிர்வாதத்துடன் விரைவில் கொரோனாவை வீழ்த்தி, பணிக்கு திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்கவும். தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com