

பொன்னமராவதி:
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் உள்ள வலையபட்டி, வளையர் வளவு, அங்கன்வாடி மையம், பொன்னமராவதி பஸ் நிலையம், பேரூராட்சியின் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.