நாமக்கல் மாவட்டத்தில் 494 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

நாமக்கல் மாவட்டத்தில் 494 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் 494 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 18-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 457 இடங்கள் மற்றும் 37 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 494 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பயிற்சி செவிலியர்கள் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த 17 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com