ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 241 பேருக்கு பரிசோதனை செய்ததில் 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 92 ஆயிரத்து 578 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 211 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 90 ஆயிரத்து 179 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 626 பேர் பலியாகி உள்ள நிலையில், தற்போது தொற்று உள்ள 1,773 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com