புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3 போ தொற்றுக்கு பலியாகினா.
புதிதாக 141 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
Published on

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று புதிதாக 141 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது. இதில் 89 ஆயிரத்து 763 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளார்கள். இதில் நேற்று மட்டும் 213 பேர் குணமடைந்தார்கள். தற்போது ஆயிரத்து 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி கடந்த மாதம் 23-ந் தேதியும், 80 வயது முதியவர் கடந்த 15-ந் தேதியும், 70 வயது முதியவர் 17-ந் தேதியும் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 626 ஆக உயர்ந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com