கொரோனா வைரஸ் பீதி: மீன் உணவுக்கு மாறிய திசையன்விளை பகுதி மக்கள் கோழி, முட்டை விற்பனை மந்தம்

கொரோனா வைரஸ் பீதியால் திசையன்விளை பகுதி மக்கள் மீன் உணவுக்கு மாறியுள்ளனர். நேற்று கறிக்கோழி, முட்டை விற்பனை மந்தமாக காணப்பட்டது.
கொரோனா வைரஸ் பீதி: மீன் உணவுக்கு மாறிய திசையன்விளை பகுதி மக்கள் கோழி, முட்டை விற்பனை மந்தம்
Published on

திசையன்விளை,

கொரோனா வைரஸ் பீதி மக்களை தொற்றிக் கொண்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல்வதை, குறிப்பாக பஸ்நிலையம், ரெயில்வே நிலையம், மார்க்கெட், வணிக வளாகம் போன்ற இடங்களுக்கு செல்வதை மார்ச்.31-ந் தேதி வரை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நேற்று பஸ்நிலையங்கள், ரெயில் நிலையம், மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பஸ்கள், ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் மிக குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் கோழி, முட்டை போன்றவற்றை தவிர்த்து வருகின்றனர்.

சாளை ரக மீன்கள் ரூ.10-க்கு 4 முதல் 6 மீன்களும், வலை மீன்கள் சிறிய ரகம் கிலோ ரூ.200-க்கும், பெரிய ரகம் கிலோ ரூ.400-க்கும், மாவுளா மீன் சிறிய ரகம் கிலோ ரூ.400-க்கும், பெரிய ரகம் ரூ.600-க்கும், சீலா ரக மீன்கள் சிறிய ரகம் கிலோ ரூ.400-க்கும், பெரிய ரகம் கிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற ரக மீன்கள் நேற்றுகூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com