ராசிபுரத்தில் ரூ.37 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.37 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடந்தது
ராசிபுரத்தில் ரூ.37 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

ராசிபுரம், பிப்.1-

ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.37 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடந்தது.

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துகாளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 1,185 பருத்தி மூட்டைகள் ரூ.37 லட்சத்திற்கு ஏலம் போனது. அதில் ஆர்.சி.எச். ரக பருத்தி 944 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 154 மூட்டைகளும், கொட்டு பருத்தி 87 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

கொட்டு பருத்தி

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.9,469-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10,701-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.11,105 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.14,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4,205 முதல் அதிகபட்சமாக ரூ.7,500-க்கும் ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் நடந்த ஏலத்தில் குறைந்த அளவிலான பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com