ராசிபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

ராசிபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரத்தில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

ராசிபுரம்:

ராசிபுரத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது. மேலும் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே உள்ள பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துகாளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 4,694 பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி 4,427 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 59 மூட்டைகளும், கொட்டு பருத்தி 208 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.ஏச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8,539-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10,019-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.11,502 முதல் அதிகட்சமாக ஒரு குவிண்டால் ரூ.14,739-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3,850 முதல் அதிகபட்சமாக ரூ.5,525-க்கும் ஏலம் விடப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் நடந்த ஏலத்தில் பருத்தி வரத்து குறைவாக இருந்த போதிலும், பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com