கப்பிள் ஷோ பீஸ்

கோடை விடுமுறையில், வீட்டில் இருந்தபடி ஸ்மார்ட் போன்களில் மூழ்கும் குழந்தைகளை, பெற்றோர் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடச்செய்யலாம். அந்தவகையில் அழகான ‘கப்பிள் ஷோ பீஸ்’ செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள்.
கப்பிள் ஷோ பீஸ்
Published on

கோடை விடுமுறையில், வீட்டில் இருந்தபடி ஸ்மார்ட் போன்களில் மூழ்கும் குழந்தைகளை, பெற்றோர் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடச்செய்யலாம். அந்தவகையில் அழகான 'கப்பிள் ஷோ பீஸ்' செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள். இதை நிழலில் வளரக்கூடிய செடிகளை நட்டு வைக்கும் பிளான்டராக பயன்படுத்தலாம். மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் செடிகளை இதில் வைத்து டி.வி. மற்றும் கம்ப்யூட்டர் டேபிளை அலங்கரிக்கலாம். அதன் செய்முறை இதோ…

தேவையான பொருட்கள்:

கார்டு போர்டு அட்டை - 1

வெள்ளை சிமெண்ட் - 1 கப்

பசை - கப்

உப்புக்காகிதம் - 1 துண்டு

விருப்பமான நிறத்தில் பெயிண்ட் - 1

செய்முறை:

படம் 1

படத்தில் இருப்பதைப் போன்ற உருவங்களை கார்டுபோர்டில் வரைந்து வெட்டிக் கொள்ளுங்கள்.

படம் 2 & 3

சப்பாத்தி ரோலர் கொண்டு லேசாக அட்டை மீது உருட்டினால், அட்டை (உருவங்கள்) அழகாக வளைந்துக்கொள்ளும்.

படம் 4

அடுத்து பசைக்கொண்டு எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று நன்றாக ஒட்டுங்கள். இது குறைந்தது 3 மணிநேரம் உலர வேண்டும்.

படம் 5

நாம் செய்து வைத்திருக்கும் கார்டுபோர்டு அடித்தளம் பார்ப்பதற்கு இவ்வாறு இருக்கும்.

படம் 6

வெள்ளை சிமெண்டில் தேவையான அளவு பசை ஊற்றி தோசை மாவு பதத்தில் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதை செய்து வைத்திருக்கும் அட்டை உருவத்தின் மீது பிரஷ் கொண்டு பூசுங்கள்.

படம் 7

வெள்ளை சிமெண்ட்டை சற்று கெட்டியாகக் கரைத்து கைவிரலால் மேலும் ஒரு முறை அட்டையின் மீது பூசுங்கள். இதனை 5 மணி நேரம் நன்றாக உலர வையுங்கள்.

படம் 8

பிறகு உப்புத்தாள் கொண்டு எல்லா இடத்திலும் மென்மையாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மேற்புறம் வழுவழு என மென்மையாக மாறும்.

படம் 9

பின்னர் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தை பூசி மூன்று மணி நேரம் உலர விடுங்கள். இப்போது அழகான 'கப்பிள் ஷோ பீஸ்' தயார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com