கிடா சண்டைக்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

கிடா சண்டைக்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கிடா சண்டைக்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கல்புளிச்சான் பட்டியைச்சேர்ந்த முத்துப்பாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த திருவிழாவையொட்டி, வருகிற 10-ந்தேதி கிடா முட்டு சண்டை நடத்த அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் மனு அளித்து இருந்தோம். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே அன்றையதினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கிடா முட்டு சண்டை நடத்த அனுமதிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com