குமரியில் இன்று 28 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்

குமரி மாவட்டத்தில் இன்று 28 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரியில் இன்று 28 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இன்று 28 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்

குமரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 28 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைகோடு, குட்டக்குழி, கோதநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாகர்கோவிலில் இந்து கல்லூரி, டதி பள்ளி மற்றும் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் நடக்கும் முகாமில் அனைத்து வயதினருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் டோக்கன் வழங்கப்படும். மேலும் செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்படும். குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வெளிநாடு செல்வோருக்கான 2-வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி நேரடி டோக்கன் மூலம் செலுத்தப்படுகிறது.

நேரடி டோக்கன்

பூதப்பாண்டி, கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, கருங்கல் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளி, மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொற்றையடி அரசு தொடக்கப்பள்ளி, கனகப்பபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி, பிள்ளையார்விளை அரசு நடுநிலைப்பள்ளி, கீழமணக்குடி புனித அந்தோணி நடுநிலைப்பள்ளி, சரல்விளை அரசு தொடக்கப்பள்ளி, கோணம்காடு ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி, குஞ்சம்காடு அரசு தொடக்கப்பள்ளி, நட்டாலம் எம்.எஸ்.சி. உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நேரடி டோக்கன் மூலம் அனைத்து வயதினருக்கும், நீரழிவு நோயாளிகளுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com