மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.6 லட்சம் கடனுதவி

எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.6 லட்சம் கடனுதவி
Published on

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் வானதி முன்னிலை வகித்தார். இதில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6 லட்சம் கடனுதவி வழங்கினார். அதனை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடினார். மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அங்கையற்கண்ணி, மேலாளர் ராஜசேகரன், வட்டார இயக்க மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com