சித்தார்த்தை கூத்தாடி என்று விமர்சிப்பதா? நடிகை கஸ்தூரி ஆவேசம்

நடிகர் சித்தார்த் வலைத்தள பக்கத்தில் பா.ஜனதாவை விமர்சித்து வந்தார். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் குறைகூறினார்.
சித்தார்த்தை கூத்தாடி என்று விமர்சிப்பதா? நடிகை கஸ்தூரி ஆவேசம்
Published on

இது பா.ஜனதா கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சித்தார்த் கூறியிருந்தார். தற்போது சித்தார்த்தை கூத்தாடி என்று விமர்சித்து வலைத்தளத்தில் பதிவுகள் வந்துள்ளன.

இதனை கண்டித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எதிரிகளை மதிப்பதுதான் தமிழர் நாகரிகம். அதை மறக்க வேண்டாம். சித்தார்த் தொழிலை விமர்சனம் செய்ய நீங்கள் யார்? நீங்கள் வணங்கும் ஈசனும் கூத்தபிரான்தான். நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில் வாயாடி. சரியா?. பா.ஜனதா ஆதரவு நடிகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? சித்தார்த் எல்லை தாண்டுகிறார் என்பதையும் நான் ஏற்கிறேன். அவரது எதிர்மறை விமர்சனங்கள் அவருக்கு எதிராக திரும்புகின்றன. அவரது தொழிலை விமர்சிப்பதைத்தான் நான் கண்டிக்கிறேன். சித்தார்த்தை திட்டுவதாக நினைத்து எத்தனையோ கலைஞர்கள் வணங்கும் கலைத்தொழிலை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. சித்தார்த் நடிகர்கள் அனைவரின் பிரிதிநிதியும் இல்லை. ரஜினி, கங்கனா, குஷ்பு, காயத்ரி ரகுராம், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய்குமார் இவர்களுக்கு பா.ஜனதாவில் என்ன பேரு என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com