தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தார்சாலை அமைக்கப்படுமா?

குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்துக்கு செல்லும் வழியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் மட்டுமே பரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அந்த பாலத்தில் செல்லும் போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், கோவிலூர்.

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

நிலக்கோட்டை தாலுகா நூத்துலாபுரம் ஊராட்சி குளத்துப்பட்டி பகுதியில் பாதி முறிந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. அந்த வழியாக தான் தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். அந்த நேரத்தில் மின்கம்பம் முழுமையாக முறிந்து மாணவ-மாணவிகள் மீது விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துமாரி, குளத்துப்பட்டி.

சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

வேடசந்தூர் தாலுகா அழகாபுரி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், அழகாபுரி.

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

செட்டியப்பட்டி பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருஷ்ணன், செட்டியப்பட்டி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com