தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

வேடசந்தூர் தாலுகா இ.சித்தூர் நல்லமநாயக்கன்பட்டியில் தார்சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், நல்லமநாயக்கன்பட்டி.

சாக்கடை கால்வாய் சேதம்

தேனி பங்களாமேட்டில் உள்ள சாக்கடை கால்வாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை பராமரிப்பு பணியின் போது சேதமடைந்தது. அதன் பின்னர் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அத்துடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

-மாயன், தேனி.

கழிப்பறை திறக்கப்படுமா?

பழனி கிழக்கு கிரிவீதி சுற்றுலா பஸ் நிலையம் அருகே உள்ள பொது கழிப்பறை கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பழனியில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, பழனி.

சேதமடைந்த தண்ணீர் தொட்டி

பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் உள்ள தண்ணீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அதில் குடிநீர் நிரப்ப முடிவதில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழரசன், பழனி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com