தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகனங்களால் இடையூறு
போடி பஸ் நிலைய வளாகத்தில் தனியார் வாடகை வாகனங்கள், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. பஸ் நிலையத்தை ஆக்கிரமிக்கும் இதுபோன்ற வாகனங்களால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், போடி.
ஆக்கிரமிப்பின் பிடியில் குளங்கள்
தேனியை அடுத்த எரசக்கநாயக்கனூரில் மஞ்சள்நதிகுளம், சித்திரகோனார்குளம், நாயகன்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உள்ளன. இந்த குளங்களை சிலர் ஆக்கிரமித்து வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் குளங்களில் தற்போது தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
-அழகுமுத்து, எரசக்கநாயக்கனூர்.
தெருநாய்கள் தொல்லை
பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகனங்களில் வருபவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பக்தர்கள் ஒருவித அச்சத்துடனேயே பூங்கா ரோட்டை கடந்து செல்லும் நிலை உள்ளது. நாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துமாரி, பழனி.
குண்டும், குழியுமான சாலை
பழனி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கணேசன், பழனி

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com