தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

இடிந்து விழும் நிலையில் பாலம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா களச்சேரியிலிருந்து தென்னஞ்சோலை செல்லும் பாலம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மேலும் வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், களச்சேரி.

பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் கடைத்தெரு உள்ளது. இந்த தெருவில் பல இடங்களில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பலர் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளங்களை சீரமைக்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பொதுமக்கள், ஆடுதுறை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com